ஹோட்டலில் சிக்கிய இந்திய வீரர்கள்; உணவு கூட பேப்பர் பிளேட் தான்.. என்ன நடந்தது?
உலகக் கோப்பை நிறைவடைந்த நிலையில் இந்தியர்கள் இன்னும் அங்கிருந்து திரும்பவில்லை.
சூறாவளி அலெர்ட்
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் பார்படாஸில் நடைபெற்றது.
இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி டி20 கோப்பையைத் தட்டி தூக்கியது. இந்நிலையில், இறுதிப் போட்டி முடிந்து 2 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பவில்லை.
அங்கு ஏற்பட்டுள்ள சூறாவளி புயலே இதற்குக் காரணம். இந்த கிரேடு 3 சூறாவளிக்கு பெரில் (Beryl) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்திய அணி நிலை
அங்கு விமானங்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், இந்திய வீரர்கள் ஹோட்டலில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் வரிசையில் நின்று பேப்பர் பிளேட்டில் உணவு சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, சூறாவளி ஓய்ந்த உடன் சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்களை அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை பிசிசிஐ எடுத்து வருவதாக கூறப்படுகிறது.