விண்ணை முட்டிய கோலி கோஷம் - பாக். ரசிகர்கள் செய்த செயலால் திகைப்பு!
பாகிஸ்தான் ரசிகர்கள், "விராட் கோலி, விராட் கோலி" என கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கோலி கோஷம்
பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனினும் இதுவரை விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
வீடியோ வைரல்
அங்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் "சாம்பியன்ஸ் டிராபியில் எந்த அணி விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பிய போது, அங்கிருந்த ரசிகர்கள் பலரும், "விராட் கோலி, விராட் கோலி" என கோஷம் எழுப்பினர்.
Fans chant 'Kohli, Kohli' and 'RCB, RCB' outside Karachi Stadium in Pakistan. pic.twitter.com/nTQ7r8bK4A
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 14, 2025
இதுதொடர்பான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. பாகிஸ்தான் ஒரு அணியின் ரசிகர்கள் இந்திய வீரரான விராட் கோலிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.