ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் - விராட் கோலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2025
By Sumathi Feb 13, 2025 09:39 AM GMT
Report

ஆர்சிபியின் புதிய கேப்டனிற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய கேப்டன்

ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என எண்ணிய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சோகத்தை கொடுத்துள்ளது. ரஜத் பட்டிதார், மத்திய பிரதேச அணி கேப்டனாக சையது முஸ்தாக் அலி தொடரில் செயல்பட்டுள்ளார்.

rajat patidar - virat kohli

விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் கேப்டனாக இருந்துள்ளார். இந்நிலையில் இதற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்த வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆர்சிபியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

ஆர்சிபி அணியில் நீங்கள் விளையாடிய விதம், வளர்ந்து வந்த விதம் எல்லாம் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஆர்சிபி ரசிகர்கள் உங்களது விளையாட்டை ரசித்துள்ளார்கள். உங்களுக்கு உதவியாக நான் உள்பட ஆர்சிபி வீரர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

கோலி வாழ்த்து

இது மிகப்பெரிய பொறுப்பு. நான் இதைப் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன். ஃபாப் டு பிளெஸ்ஸி கடந்த சில வருடங்கள் செய்துள்ளார். தற்போது, இந்தப் பொறுப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது கௌரமாக கருதுகிறேன். உங்களுக்காக மகிழ்கிறேன் ரஜத். சரியான இடத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் - விராட் கோலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க! | Virat Kohli About Ipl 2025 Rcb Captain Raj Patidar

மேலும் நீங்கள் வலுவடைவீரகள் என நம்புகிறேன். கடந்த சில வருடங்களாக ரஜத் ஒரு வீரராக சிறப்பாக முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கும் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் தரம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மாநில அணியையும் நன்றாக வழிநடத்தியுள்ளார்.

ரஜத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்க ரஜத்துக்கு வாழ்த்துகள். என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு அணியாக நாம் அவருடன் இருக்க வேண்டும். ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.