இந்த விஷயத்தில் இந்திய அணி பெரிய தவறு செய்துவிட்டது - கொதித்த அஸ்வின்!
இந்திய அணியில் இந்த குறை இருப்பதாக அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
5 ஸ்பின்னர்கள்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பரீத் பும்ராவை நீக்கி ஹர்ஷித் ராணாவையும், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை நீக்கி வருண் சக்ரவர்த்தியையும் சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் என 5 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். ஆனால், 3 ஸ்பின்னர்களை மட்டுமே விளையாட வைக்க முடியும். எனவே எதற்காக 5 ஸ்பின்னர்களை சேர்த்திருக்கிறார்கள் என பலர் விமர்சித்து வருகின்றனர்.
அஸ்வின் அதிருப்தி
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணி முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ‘‘துபாய்க்கு 5 ஸ்பின்னர்களுடன் இந்தியா செல்ல உள்ளது. எதற்காக இத்தனை ஸ்பின்னர்கள்? 3-4 ஸ்பின்னர்களே போதுமானதுதான். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அபாரமான பார்மில் இருப்பதால், இந்த 2 பேருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்.
மேலும், குல்தீப் யாதவையும் விளையாட வைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, வருண் சக்ரவர்த்தியை சேர்த்தால், ஒரு வேகப்பந்து வீச்சாளரை வெளியே அனுப்பிவிட்டு ஹர்திக் பாண்டியாவை 2ஆவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
ஒருவேளை 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டால், ஒரு ஸ்பின்னரை வெளியே அனுப்பிவிட்டு, இரண்டு ஸ்பின்னர்களுடன்தான் ஆட முடியும். துபாயில், ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பு இருக்குமா? 5 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்திருப்பது, பிரச்சினையாகதான் பார்க்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.