சாம்பியன்ஸ் டிராபி; இந்த இந்திய வீரர் 3 சதங்களை அடிப்பார் - சுரேஷ் ரெய்னா உறுதி!

Virat Kohli Suresh Raina Indian Cricket Team
By Sumathi Feb 08, 2025 07:04 AM GMT
Report

சாம்பியன்ஸ் டிராபி குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

 சுரேஷ் ரெய்னா 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

suresh raina

இப்போட்டியில், காலில் ஏற்பட்ட வலி காரணமாக விராட் கோலி விலகிவிட்டார். இந்நிலையில், பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ‘‘ஐசிசி தொடர் என வந்துவிட்டால், விராட் கோலி வேற ஆளாக மாறிவிடுவார்.

ஓய்வு எப்போது? இறுக்கிப் பிடிக்கும் பிசிசிஐ - எரிச்சலடைந்த ரோஹித்!

ஓய்வு எப்போது? இறுக்கிப் பிடிக்கும் பிசிசிஐ - எரிச்சலடைந்த ரோஹித்!

கோலி பிட்னஸ்

அதற்குமுன், ரன்களை குவிக்க சிரமபட்டாலும் ஐசிசி தொடர்களில் பெரிய ஸ்கோர்களை அடித்திருப்பதை பார்த்திருக்கிறோம். டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் பைனலில் கூட, கோலியின் ஆட்டம்தான், வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபியிலும் கோலி மூன்று சதங்களை அடித்து, மேட்ச் வின்னராக இருப்பார்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

virat kohli

மேலும் இதுகுறித்து பேசியுள்ள சஞ்சை மஞ்சுரேக்கர், “ கோலி முழு பிட்னஸில் இருக்கிறார். அவரால், அடுத்த நான்கு வருடங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியும். ஒருநாள் உலகக் கோப்பை 2027 வரை கோலியால் விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.