கடந்த 75 ஆண்டுகளில் நிறைய இழந்துள்ளோம்..பிரதமர் மோடி பாகிஸ்தான் வரணும் - நவாஸ் ஷெரீப் உருக்கம்!
வருங்காலங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக பணியாற்ற விரும்புவதாகப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பைப் பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த உச்சி மாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வர் அலுவலகத்தில் நவாஸ் ஷெரீப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இஸ்லாமாபாத் வருகை ஒரு நல்ல தொடக்கம்; இரு நாடுகளும் இங்கிருந்தே முன்னேற வேண்டும் என்று கூறினார்.
பாகிஸ்தான்
தொடர்ந்து பேசியவர்,’’இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வருகை புரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார். நாம் கடந்த காலத்திற்குள் செல்லக்கூடாது; வருகிற எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். இரு தரப்பினருக்கும் அவர்களின் குறைகள் உள்ளன.மேலும் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
அதுமட்டுமில்லாது வர்த்தகம், முதலீடுகள், தொழில், சுற்றுலா, மின்சாரம் முதலியவற்றை இந்தியா தங்கள் சொந்த மாநிலங்களில் ஒருவருக்கொருவர் கையாள்வதுபோல், இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளும் கையாள வேண்டும்.
இதனையடுத்து வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் இரு நாட்டின் பிரதமர்களும் சந்திக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் நாம் நிறைபவற்றை இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.