உலக பிரச்சனைகளுக்கு தீர்வு இதில்தான் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு

Narendra Modi Delhi India Buddhism
By Karthikraja Oct 17, 2024 08:00 PM GMT
Report

பாலி மொழியை வாழ வைப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பாலி மொழி

செம்மொழி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது.

modi Abhidhamma Divas about buddha

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் அங்கு வந்திருந்த புத்த துறவிகளுக்கு புத்தாடை வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார். 

பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு - கோவிலில் பரபரப்பு

பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு - கோவிலில் பரபரப்பு

மோடி

அதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, தான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய தனது உரையை நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா உலகிற்கு ஒரு போதும் யுத்தத்தை வழங்கியதில்லை. ஆனால் புத்தத்தை வழங்கி உள்ளது. உலக பிரச்சனைகளுக்கான தீர்வு புத்தத்தில் உள்ளது. இன்று, உலகம் பல நிச்சயமற்ற தன்மைகளால் சூழப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில், புத்தர் பொருத்தமானவர் மட்டுமல்ல, அவசியமும் கூட. 

modi Abhidhamma Divas about buddha

உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான திறவுகோல் இரக்கமும், நல்லெண்ணமும்தான்.பாலி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது, புத்தரின் மரபுக்கு கிடைத்த கவுரவம். பாலி மொழியை வாழ வைப்பதும், புத்தபெருமானின் வார்த்தைகளை உயிர்ப்பிப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும்.

இந்தியாவில் உள்ள வரலாற்று பௌத்த யாத்திரை தலங்கள், நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம், மங்கோலியாவில் அவரது சிலை திறப்பு உள்ளிட்ட பல புனித நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது" என கூறினார்.