பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு - கோவிலில் பரபரப்பு
பிரதமர் மோடி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய கிரீடம் திருடப்பட்டுள்ளது.
மோடி வங்கதேச பயணம்
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சத்கிராவில் ஜேஜோரேஸ்வரி காளி அம்மன் கோவிலுக்கு (Jeshoreshwari Temple) சென்று தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் நேற்று அம்மன் சிலையில் இந்த கிரீடம் இல்லாததை கவனித்த தூய்மை பணியாளர்கள் இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
கிரீடம் திருட்டு
இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து திருட்டை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூசாரி வழிபாட்டை முடித்து விட்டு வெளியே சென்ற மதியம் 2:00 - 2:30 நேரத்தில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.
Bangladesh: CCTV footage shows a thief stealing the crown of Kali Mata from Jeshoreshwari Kali Temple in Satkhira, which was gifted by Indian PM Modi in 2021. The temple is a significant Hindu Shakti Peeth. https://t.co/NVVG2ZD9AY pic.twitter.com/wY6dyK9746
— Sidhant Sibal (@sidhant) October 11, 2024
கிரீடத்தை இளைஞர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பூசாரி வழிபாட்டை முடித்து விட்டு வெளியே சென்ற மதியம் 2:00 - 2:30 நேரத்தில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.
12 ஆம் நூற்றாண்டு கோவில்
இந்து புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் பரவியுள்ள புனிதத் தலங்களான 51 சக்தி பீடங்களில் ஜெஷோரேஸ்வரி கோயிலும் ஒன்றாகும். 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனாரி என்பவரால் கட்டப்பதாக நம்பப்படுகிறது.
ஜசோரேஸ்வரி பீடத்திற்காக 100 கதவுகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில், பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மன் சென் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. இறுதியில், ராஜா பிரதாபதித்யா 16 ஆம் நூற்றாண்டில் கோயிலை மீண்டும் கட்டினார்.