நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் - இணையதளத்தில் செம வைரல்

Dasara or Dussehra Narendra Modi Durgai Amman
By Karthikraja Oct 08, 2024 05:30 PM GMT
Report

பிரதமர் மோடி எழுதிய பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நவராத்திரி விழா

நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவின் 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. 

navaratri celebration

இந்த பண்டிகையை மேற்கு வங்கம், கர்நாடக உள்ளிட்ட சில மாநிலங்கள் தசரா என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. வீடு மற்றும் அலுவலகங்களில் கொலு அமைத்து வழிபாட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்காக கோயில் கட்டிய விவசாயி - என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்காக கோயில் கட்டிய விவசாயி - என்ன காரணம் தெரியுமா?

மோடி எழுதிய பாடல்

நவராத்திரியை முன்னிட்டு துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கும் வகையில் 'ஆவதி கலாய்' என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது நவராத்திரியின் புனித மான நாள். அன்னை துர்கை மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘ஆவதி கலாய்' என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி உள்ளேன். நமக்கு அன்னை துர்கையின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும்" என தெரிவித்துள்ளார். இந்த பாடலை பலரும் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.