ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது - கொந்தளித்த இந்தியா!

Narendra Modi Justin Trudeau India Canada
By Sumathi Oct 18, 2024 05:55 AM GMT
Report

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு

பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியதற்கான ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

modi - justin trudeau

இந்நிலையில் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று நாங்கள் கேள்விபட்டவை எல்லாம் நாங்கள் தொடர்ந்து பேசி வந்ததை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக தான் வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் கனடா எங்களிடம் (இந்தியாவிடம்) அளிக்கவில்லை.

ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் - இந்தியாவின் முடிவு என்ன?

ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் - இந்தியாவின் முடிவு என்ன?


 இந்தியா கண்டனம்

இந்தியா - கனடா இடையேயான உறவுகளின் இந்த ஏற்றுக்கொள்ளமுடியாத (cavalier attitude) நடத்தை ஏற்படுத்திய சேதத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு" என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது - கொந்தளித்த இந்தியா! | India Calls Out Trudeau S Cavalier Behaviour

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி அரசினை விமர்சிப்பவர்களை கனாடவில் மவுனமாக்கும் செயல்களில் இந்திய அரசின் தொடர்பு இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பான ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங், கனடா மண்ணில் கொல்லப்பட்டதில் இந்தியாவின் தொடர்பு குறித்து தனது அரசின் உளவுத்துறை மூலம் கிடைத்த ஊகங்களைத் தவிர ஆதராங்களை வழங்கவில்லை என்று ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.