மூட்டு முதல் பீரியட்ஸ் வலி வரை; 'Meftal' மாத்திரை எடுப்பீங்களா? கவனம் தேவை!
Meftal மாத்திரை குறித்த எச்சரிக்கையை இந்தியா மருந்தியல் ஆணையம் விடுத்துள்ளது.
Meftal மாத்திரை
இந்தியாவில் பெண்கள் முடக்குவாதம் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை சமாளிக்க meftal என்னும் மாத்திரியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாத்திரை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எளிதாக கிடைத்துவிடும். இந்நிலையில், இந்த மாத்திரை சில மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
எச்சரிக்கை
இதனை அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரைகளை உட்கொண்ட இரண்டு முதல் எட்டு வாரங்களுக்குப் பின் தோன்றும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் வலி ஏற்படும்போது தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மெஃப்டால் வலி நிவாரணி மாத்திரையில் மெஃபெனாமிக் அமிலம் உள்ளது. இது முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நிலைகளுக்கு பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.