மாதவிடாய் ஒழுங்கா வரவில்லையா? கவலை வேண்டாம் - இதோ வீட்டு வைத்தியம்

lifestyle-health
By Nandhini Jan 03, 2022 10:03 AM GMT
Report
323 Shares

மாதவிடாய் சீராக இல்லாமல் அதிக நாட்கள் கழித்தோ அல்லது குறைவான நாட்களிலோ அடிக்கடி மாதவிடாய் வந்தால் உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய், அதிக இரத்த போக்கு, விட்டு விட்டு வரும் மாதவிடாய் ஒழுங்கற்ற மாதவிடாய் எனப்படுகின்றது.

இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஏற்படுவது, ஹார்மோனின் சமமற்ற நிலை இவையெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து இதனை போக்குவது நல்லது.

அந்தவகையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை போக்கும் சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை தேனுடன் கலந்து தினமும் காலையில், சாப்பிடுவதற்கு முன் இதனை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக மாதவிடாய் சார்ந்த கோளாறுகள் குணமடையும்.

இலவங்க தூள்

ஒரு குவளை பாலில் 1/2 டீஸ்பூன் இலவங்க தூளை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இது குணமடையும்.

ஆலமர வேர்

ஆலமர வேரினை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் பால் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.

எள்ளு விதை

இரவில் எள்ளு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகினால் பலன் அடைவது நிச்சயம்.

சீரக விதை

சீரக விதையின் மாவை நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகினால் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்காது. இதில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் மாதவிடாயின் போது இரும்பு சத்து குறைப்பாடு நிகழ்ந்தால் இந்த விதைகள் காக்கும்.

பப்பாளி

பப்பாளியை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறும். மெனோபாஸ் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வு பப்பாளி.

செம்பருத்தி பூ 

ஈஸ்ட்ரோஜனை ஒழுங்காக செயல்பட வைக்க செம்பருத்தி பூ உதவும். இதனால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்கும்.

துளசி சாறு

ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சம அளவில் துளசி சாற்றை எடுத்து கொண்டால் இதன் மருத்துவ குணத்தை முழுமையாக அடைய முடியும். இதனால் மாதவிடாயின் போது வரும் கீழ் முதுகு வலி சீராகும்.

மாதவிடாய் ஒழுங்கா வரவில்லையா? கவலை வேண்டாம் - இதோ வீட்டு வைத்தியம் | Lifestyle Health


You May Like This