பத்மஜா போயி.. நீண்ட வாக்கியத்தை 2 வார்த்தையில் புரிய வைத்த மொழிபெயர்ப்பாளர் - வைரல் Video!
கேரளாவை சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிருந்தா காரத்
கேரளா மாநிலத்தை சேர்ந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தனது மொழிபெயர்ப்பின் மூலம் பாராட்டை பெற்றுள்ளார். கேரளாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பங்கேற்றார்.
அப்போது மேடையில் பேசிய அவர் "கேரள முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கருணாகரனின் மகள் பாஜகவுக்கு சென்றுவிட்டதை கேள்விப்பட்டேன்" என்று குறிப்பிட்டார்.
பத்மஜா போயி..
இதனை மொழிபெயர்த்த நபர் "பத்மஜா போயி" என்று இரண்டே வார்த்தைகளில் முழு அர்த்தத்தையும் அங்கிருந்தவர்களுக்கு புரிய வைத்தார். இதனால் அங்கு கைத்தட்டலும், சிரிப்பலையும் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் மொழிபெயர்ப்பு என்றால் இதுபோன்று இருக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Translator be like: keep it short and simple.
— Korah Abraham (@thekorahabraham) March 10, 2024
'Padmaja poyi' pic.twitter.com/Ch1pvy4jOh