1,122 சடலங்கள் விற்பனை.. வருவாய் ஈட்டிய அரசு - எத்தனை கோடி தெரியுமா?

Kerala India
By Jiyath Mar 10, 2024 07:24 AM GMT
Report

உரிமை கோரப்படாத சடலங்களை விற்றதில் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சடலங்கள் விற்பனை 

கேரள மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உரிமை கோரப்படாத சடலங்களை அம்மாநில அரசு விற்பனை செய்து வருகிறது.

1,122 சடலங்கள் விற்பனை.. வருவாய் ஈட்டிய அரசு - எத்தனை கோடி தெரியுமா? | Rs 366 Crores Through Unclaimed Dead Bodies

தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்வி நோக்கங்களுக்காக வாரிசுகள் இல்லாமல் இறந்த உடல்களைப் பெற அனுமதிக்கும் சிறப்பு ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. கேரள அரசு மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது.

குழந்தையை வீட்டில் சிறை வைத்து தாக்கிய தாய், ஆண் நண்பர் - காயங்களுடன் மீட்பு!

குழந்தையை வீட்டில் சிறை வைத்து தாக்கிய தாய், ஆண் நண்பர் - காயங்களுடன் மீட்பு!

ரூ.3.66 வருவாய்

கடந்த 11 ஆண்டுகளில் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

1,122 சடலங்கள் விற்பனை.. வருவாய் ஈட்டிய அரசு - எத்தனை கோடி தெரியுமா? | Rs 366 Crores Through Unclaimed Dead Bodies

இதில் பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாய்க்கும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாய்க்கும் விற்றுள்ளது. இதில் மொத்தமா ரூ.3.66 கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.