அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட விருப்பம் - அமைச்சர் மகிழ்ச்சி தகவல்!
அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஆப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணி
கால்பந்து உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்வது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி தலைமையிலான இந்த அணி கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
அப்போது கேரளா அரசு சார்பில், இந்தியாவில் விளையாட வருமாறு அர்ஜென்டினாஅணிக்கு அழைப்பு விடப்பட்டது. மேலும், அந்த அணியுடனான நட்பு போட்டியை கேரளாவில் நடத்த அம்மாநில அரசு விருப்பம் தெரிவித்தது.
கேரளாவில்
இந்நிலையில் அந்த அழைப்பை அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.ஏ.) ஏற்றுள்ளதாகவும், இது தொடர்பாக கேரளா அரசுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளதாகவும் கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "அர்ஜென்டினா அணி கேரளா வர விருப்பம் தெரிவித்து எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் கேரளாவில் மழைக்காலம் என்பதால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்த விவரங்கள் மாநில அரசு, அர்ஜென்டினா ஏ.எப்.ஏ. இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் தெரிவிக்கப்படும்" என்கறார்.