ஆழ்கடலுக்குள் செங்கல் சாலையா? மிரண்டு போன விஞ்ஞானிகள்!
கடலுக்குள் செங்கற்களால் ஆன சாலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடல்சார் பாதுகாப்பு
பாபஹனமோகுவாக்கியா கடல்சார் தேசிய நினைவுச் சின்னம் (PMNM) உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்று. இதில் 3 சதவீதம் மட்டுமே விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டுள்ளன.
எனவே, இதன் மேற்பரப்பிலிருந்து 3,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ள இதன் எல்லைகளை ஆராய்வதில் பெருங்கடல் ஆய்வு அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வில் ஆச்சர்யம்
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்கு வடக்கே உள்ள ஒரு ஆழ்கடல் சிகரத்தில் 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு பயணம் இந்த காட்சியை வெளிப்படுத்துயுள்ளது. அதில், மஞ்சள் செங்கற்களால் ஆன சாலை போல தோற்றமளிக்கும் ஒரு பழங்கால வறண்ட ஏரியின் அடிப்பகுதியை விஞ்ஞானிகள் அங்கு கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வுகள் மூலம் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தெரிவிக்கக்கூடிய கடல் மலைகளின் வாழும் சமூகங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்க முடியும். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.