ஆழ்கடலில் ஏலியன்' உலகம்.. விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த புதிய உயிரினம்- மிரளவைக்கும் பின்னணி!
ஆழ்கடலில் 7,500க்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள்
பொதுவாக கடலில் இந்த ஆழத்தில் வாழ்க்கை என்பது மிகவும் கடினம். வெப்பநிலை கிட்டத்தட்ட உறைநிலைக்கு அருகில் இருக்கும் மற்றும் நீர் அழுத்தம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
அப்படி, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் பசிபிக் மரியானா அகழி ஆழமான இடம் ஆகும் .இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கடலில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் அதாவது சுமார் 4 மைல் ஆழத்தில் 7,500 க்கும் மேற்பட்ட நுண்ணுயிரி இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
புதிய உயிரினம்
இத்தகைய நுண்ணுயிரிகள் சிறிய மரபணுக்களைக் கொண்டுள்ளன. அவை மிகக் குறைந்த வளங்களுடன் கூட உயிர்வாழ்கின்றன.
இவற்றில் சுமார் 90 சதவீதம் 'ஏலியன்கள்' என்று சொல்லப்படுகிறது. இது அறிவியலுக்கு முற்றிலும் புதியது என்றுசீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.