நடுக்கடலில் மோதி தீப்பிடித்த கப்பல்கள்; 32 பேர் உயிரிழப்பு - பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
நடுக் கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதி தீ பிடித்துள்ளது.
கப்பல்கள் மோதி விபத்து
எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் இருந்து எண்ணெய் டேங்கர் கப்பல் மூலம் கச்சா எண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவை பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் அடிப்படையில் இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் வடக்கு கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் போக்குவரத்து தீவிரமாக உள்ளது.
32 பேர் பலி
இந்நிலையில், யார்க்ஷையர் கடற்கரைக்கு அருகே போர்த்துகீஸை சேர்ந்த சோலாங் என்ற கண்டெய்னர் சிகிச்சை கப்பலும், ஸ்டேனா இமாக்குலேட் என்ற அமெரிக்க டேங்கர் கப்பலும் நேருக்கு நேர் மோதி கொண்டுள்ளது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த 32 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹெலிகாப்டர்கள், ஸ்கெக்னஸ், பிரிட்லிங்டன், மேபிள் தோர்ப் மற்றும் கிளீதோர்ப்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.