திடீரென விமானத்தில் முழுவதுமாக ஆடையை கழற்றிய பெண் - முகம் சுளித்த பயணிகள்!
விமானத்தில் பெண் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து கத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெண் செயல்
அமெரிக்கா, ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்துள்ளது.
தொடர்ந்து விமானி கேட்டில் இருந்து கிளம்பி ரன்வே நோக்கி விமானத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். அப்போது திடீரென பெண் ஒருவர் தனது ஆடைகளை எல்லாம் கழற்றி பைலட்கள் இருந்த காக்பிட்டில் நுழைய முயன்றுள்ளார். தன்னை இறக்கிவிடுமாறு சொல்லிக் கத்தியுள்ளார்.
மிரண்ட பயணிகள்
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், முதலில் தொப்பி, காலணிகளை மட்டுமே கழற்றினார். இதனால் யாரும் பெரிதாக நினைக்கவில்லை. விமானப் பணிப்பெண்கள் அருகே வந்து அவரை தடுப்பதற்குள், அவர் மொத்தமாக அனைத்து டிரஸையும் கழற்றி நிர்வாணம் ஆகிவிட்டார்.
இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் முகம் சுளித்தனர். அந்த பெண் கட்டுக்கடங்காமல் ஆவேசமாகக் கத்திக்கொண்டே இருந்தார். பைலட், விமானத்தை மீண்டும் விமான நிலைய கேட்டிற்கே திருப்பிவிட்டார். விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர், நிர்வாணமாக இருந்த அந்த பெண் மீது டிரஸை கொண்டு மூட முயன்றார்.
ஆனால், அதற்கு அடங்காமல் அதையும் தூக்கி வீசிவிட்டுக் கத்திக் கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விமானம் ஏர்போர்ட்டிற்கு திரும்பிய நிலையில், போலீஸார் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் வரை விமானம் தாமதமாக கிளம்பியது குறிப்பிடத்தக்கது.