100-க்கும் மேற்பட்ட கார்கள் மோதி விபத்து; ஸ்தம்பித்த போக்குவரத்து - என்ன காரணம்?
சாலையில் அடுத்தடுத்து 100 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
பனிப்பொழிவு
சீனாவில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல், பனிமழை பொழிந்து மக்களின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது.
இந்த மோசமான கால கட்டத்திலும் மக்கள் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட அவர்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்கு ஆளாகியுள்ளது.
சாலை விபத்து
இந்நிலையில், கஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிப்பொழிவு காரணத்தால் அங்குள்ள சாலைகளில் பனிபடர்ந்துள்ளது. அந்த சாலையை பயண்படுத்திய வாகண ஒட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
அதில் செல்லும் கார்கள் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி கொண்டே ஒன்றோடொன்று மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி, ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேலும், இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு, வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.