நிலக்கரி உற்பத்தி மையத்தில் பயங்கர விபத்து - 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

China Fire Death
By Sumathi Nov 16, 2023 10:17 AM GMT
Report

நிலக்கரி உற்பத்தி மைய தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து

வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் லுலியாங் நகரில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அலறி ஓடியுள்ளனர்.

fire accident in china

சிலர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்துள்ளனர். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் நிறுவன மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்கள் எரிந்து சேதம்

தனியார் நிறுவன மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்கள் எரிந்து சேதம்

25 பேர் பலி

இந்த விபத்து யோங்ஜு நிலக்கரி தொழில் கூட்டு கட்டிடத்தில் நடந்திருக்கிறது என்றும், இக்கட்டிடத்தில் தீ விபத்திலிருந்து தப்பிக்க போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி மையத்தில் பயங்கர விபத்து - 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு! | 25 People Died In A Fire In Northern China

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.