பூமியில் விழப்போகும் கட்டுப்பாட்டை இழந்த செயற்கைக்கோள் - பெரும் அச்சத்தில் விஞ்ஞானிகள்!
செயலிழந்த செயற்கைக்கோள் ஒன்று பூமியை நோக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள்
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் 'கிராண்ட்பாதர்' என்ற செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த செயற்கைக்கோளை அந்நிறுவனம் கட்டுப்படுத்தி இயக்கி வந்த நிலையில், அதன் ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றப்பாதையை விட்டு விலகியது. இந்நிலையில் கிராண்ட்பாதர் செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள் அச்சம்
இந்த மாதம் இறுதிக்குள் பூமியில் விழலாம் என்றும், கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் எங்கு விழும் என்று சொல்லமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அப்படி விழும்போது அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தைத் தாண்டி பூமியில் விழும் அபாயம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.