இங்குதான் இருக்கிறது; நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்த நாசாவின் செயற்கைக்கோள்!

India NASA ISRO Chandrayaan-3
By Jiyath Sep 06, 2023 10:45 AM GMT
Report

நிலவில் சந்திரயான் 3 லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா.

சந்திரயான் 3 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.

இங்குதான் இருக்கிறது; நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்த நாசாவின் செயற்கைக்கோள்! | Chandrayaan 3 Lander Spotted On Moon By Nasa I

விக்ரம் லெண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதில் ஆக்ஸிஜன், மாங்கனீஸ், சிலிகான், இரும்பு, கால்சியம், சல்பர் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர்.

நாசா வெளியிட்ட புகைப்படம் 

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் சந்திரேயான் 3 லேண்டர் இருக்கும் இடத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் லூனார் ஆர்பிட்டர் புகைப்படம் பிடித்துள்ளது.

இங்குதான் இருக்கிறது; நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்த நாசாவின் செயற்கைக்கோள்! | Chandrayaan 3 Lander Spotted On Moon By Nasa I

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நாசா "இந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்த நாசா,"எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

சந்திரயான் 3 தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு லேண்டரின் சாய்ந்த பார்வையை (42-டிகிரி ஸ்லூ ஆங்கிள்) எல்ஆர்ஓ கேமரா படம் பிடித்தது. ராக்கெட் ப்ளூம் நுண்ணிய ரேகோலித் (மண்) உடன் தொடர்புகொள்வதால் லேண்டரைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தெரிந்தது" என்று பதிவிட்டுள்ளது.