அவ்வளவு குட்டி..! இந்த நாட்டை ஒரே நாளில் நடந்து சென்றே சுற்றிப் பார்க்கலாம்!
உலகின் 6-வது சிறிய நாடாக அறியப்படும் லிச்சென்ஸ்டீன் நாடு குறித்த தகவல்.
லிச்சென்ஸ்டீன்
உலகின் 6-வது சிறிய நாடாக அறியப்படுகிறது லிச்சென்ஸ்டீன் நாடு. இந்த நாட்டின் தலை நகராக வடூஸ் உள்ளது. சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ள லிச்சென்ஸ்டீனில், சுமார் 40,000 மக்கள் வசிக்கின்றனர்.
ஜெர்மன் மொழி பேசப்படும் இந்த நாட்டில், சுவிஸ் பிராங்க் நாணயம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டின் வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை வெறும் 15 மயில்கள் தூரம் மட்டுமே உள்ளன.
எழில் கொஞ்சும் காட்சிகள்
அதேபோல் கிழக்கு முனையிலிருந்து மேற்கு முனையிலான தூரம் வெறும் 2.50 மைல்கள் மட்டுமே உள்ளனர். மேலும், பச்சை போர்வை போத்தியது போல எங்கு திரும்பினாலும் பசுமை என எழில் கொஞ்சும் காட்சிகளை லிச்சென்ஸ்டீனில் காண முடியும்.
அதேபோல் இங்கு பழமையான கோட்டைகளும் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாட்டின் அழகை ரசிக்க பல நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். மேலும், ஐரோப்பாவின் 4வது சிறிய நாடு என்ற சிறப்பையும் பெற்றுள்ள லிச்சென்ஸ்டீனை, ஒரே நாளில் கால் நடையாகவே உங்களால் சுற்றிப் பார்க்க முடியுமாம்.