வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் - கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது!
வங்கி கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என வங்கிகளுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார்.
புதிய பொருளாளர் நியமனம்
நேற்று சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொது குழுவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஈ.பி.எஸ் வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
வங்கிகளுக்கு கடிதம்
இதனைத் தொடர்ந்து அதிமுக கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார். என்னை கேட்காமல் எந்த ஒரு வரவு-செலவு கணக்குகளையும் யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களை தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கும் ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இனி சிரமமில்லை...பிங்க் ஆக மாறும் பெண்கள் இலவச பேருந்து!