காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் - திமுக அரசு இதுவரை.. ஓபிஎஸ் காட்டம்!

M K Stalin O Paneer Selvam DMK
By Vidhya Senthil Jul 29, 2024 12:00 PM GMT
Report

சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்களை முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்க திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை 

டெல்டா விவசாயிகள் காவேரி நீரை மட்டுமே நம்பியுள்ள நிலையில், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட இயலவில்லை.

காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் - திமுக அரசு இதுவரை.. ஓபிஎஸ் காட்டம்! | Ops Urges Dmk Govt To Provide Samba Cultivation

இருப்பினும், நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடியை மேற்கொள்ள காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர். 

ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார் : காரணம் என்ன?

ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார் : காரணம் என்ன?

சம்பா சாகுபடி

இந்தச் சூழ்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் பெருமளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலப்பகுதிகளுக்கு மட்டும் செல்லுமாறும், ஆறுகளில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளுமாறும், சம்பா விதைப்பு மேற்கொண்ட பிறகு அந்த நிலப் பகுதிகளுக்கு நீரினை அளிக்கும் வகையிலும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காவேரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் - திமுக அரசு இதுவரை.. ஓபிஎஸ் காட்டம்! | Ops Urges Dmk Govt To Provide Samba Cultivation

பயிர்க்கடன் ..

மேலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்களை முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கவும், பயிர்க்கடனை உடனடியாக அளிக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வேளாண் விவசாயிகளுக்கு உரிய இடுபொருட்களை உடனடியாக வழங்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.