ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார் : காரணம் என்ன?
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை புறக்கணித்து அதிமுக அலுவலகம் சென்றார்.
கலவரமான அலுவலகம்
ஓ. பன்னீர்செல்வம் வருகையை அறிந்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டது. இதில் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
அத்துடன் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது . அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக கட்சி அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
ஒபிஎஸ் மீது புகார்
இதனால் அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வம் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அதிமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுகுழுவிற்கு தடையில்லை... ஓபிஎஸ்க்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!