சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ் - அரசியலில் அடுத்தகட்ட முக்கிய முடிவு!
சசிகலாவுடன் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சசிகலா - ஓபிஎஸ்
மறையாத முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டமோதல் நீடித்துக் கொண்டே செல்கிறது. இதன்பிறகு அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வத்தை முழுமையாக விலக்கிவைத்து.
விட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.
அதேபோல, சசிகலாவும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் செய்த சுற்றுப்பயணத்தில் நிச்சயம் எனது தலைமையில் அ.தி.மு.க. ஓன்றுபடும் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
முக்கிய முடிவு
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை. சசிகலாவுடன் கைகோர்த்து அவர் செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், சசிகலாவை விரைவில் சந்திப்பேன் ஓ.பி.எஸ். கூறிஇருந்தார்.
இந்த சூழலில், 26-ந்தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் முன்னணி நிர்வாகிகளின் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மலையில் நடைபெறுகிறது. அதில் ஓபிஎஸ் அரசியலில் தனது எதிர்காலம் பற்றி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலரின் விருப்பமாக உள்ளது. அதே நேரத்தில் அவர் அதிமுகவில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற அக்கருத்தை அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தை சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால் சசிகலாவுடன் கைகோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகளை அவர் எடுக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.