அதிமுகவில் சசிகலா ஓபிஎஸ் - ஒதுக்கப்படும் இபிஎஸ்? எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

O Paneer Selvam ADMK V. K. Sasikala Edappadi K. Palaniswami
By Karthick May 20, 2024 09:34 AM GMT
Report

அதிமுகவில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் இணைக்கப்படவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

சசிகலா ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் - கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைக்கப்படவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

Sasikala OPS EPS

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவரை அதனை முழுவதுமாக மறுத்து ஓபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டை வைத்தார்.

அதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு,

எஸ்.பி.வேலுமணி பேட்டி

இந்த பிரச்னைகளை கிளப்பி விடுவது யார்..? எடப்பாடியாரின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்று கொண்டு விட்டனர். பெரும் வெற்றியை பெற போகிறோம். வெற்றி நடை எடப்பாடியார் தலைமையில் போட்டுவாரோம். இது போன்ற கேள்வியை கேட்பது யாரு? இதுக்கெல்லாம் முடிவு தேர்தல் வெற்றி தான்.

அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்..? ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!

அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்..? ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!

இந்த பிரச்சனையையெல்லாம் பத்திரிகை'ல தான் எழுதுறீங்க. தேர்தல் பணி முடிந்துள்ள நிலையில், கொஞ்ச வேலை கம்மியா இருக்கு. இதுல ஒரு சில பத்திரிகை தான் ஒரு பிம்பத்தை உருவாக்குறீங்க. திமுக போன்ற மற்ற கட்சிகளின் தூண்டுதலில் இது போன்ற நடக்குது.

sp velumani answers on sasikala and ops in admk

எடப்பாடியார் பேர சொன்ன, எழுத்து'னா தான் பத்திரிகை படிக்கிறாங்க என்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என பொதுச்செயலாளரே எங்களிடம் சொன்னார். 2026 தேர்தல் மட்டுமின்றி இனி வர கூடிய தேர்தலில் அண்ணா திமுக பெரிய வெற்றியை பெரும் என கூறி சென்றார்.