நீதிமன்ற உத்தரவு; காரில் கட்சி கொடி இல்லை, உடனடி ஆலோசனை - ஓபிஎஸ் அடுத்த மூவ்?
தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் ஓபிஎஸ் பயணம் செய்தார்.
கொடி அகற்றம்
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஓபிஎஸ் நடவடிக்கை
இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்துக்கு காரில் வருகையில் அதிமுக கொடியை அகற்றி இருந்தார். அதனையடுத்து, தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ,
முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூரு வ.புகழேந்தி உள்ளிட்டோருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், அதன் உத்தரவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.