நீதிமன்றம் போட்ட உத்தரவு...!! முதல் முறையாக பணிந்த ஓபிஎஸ்..!! சோகத்தில் தொண்டர்கள்..!!

By Karthick Nov 09, 2023 09:03 AM GMT
Report

சில நாட்கள் முன்பு சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் லெட்டர் படை பயனப்படுத்த தடை விதித்திருந்தது.

அதிமுக விவகாரம்

கட்சியில் இருந்த விதிகளை திருத்தி எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்ற படிகளை ஏறி வருகின்றார் ஓபிஎஸ்.

ops-removes-admk-flag-from-his-vehicle

அதே நேரத்தில் தேர்தலை ஆணையமும் இபிஸை பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவர்களுக்கு இரட்டை இல்லை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. இருப்பினும், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

நீதிபதி கண்டனம்

இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது, இபிஸ் தரப்பில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபிறகும் அதே பதவியை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார் என்றும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் ஓபிஎஸ் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றார் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

ops-removes-admk-flag-from-his-vehicle

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய அவகாசத்தை ஓபிஎஸ் தரப்பு கோரிய நிலையில், எத்தனை முறை இப்படி வழக்கு தொடருவீர்கள்? என்றும் நேரம் கேட்பீர்கள்? என்று நீதிபதி சதீஷ்குமார் ஓபிஎஸ் தரப்பினரை வினவினார்.

மேலும், அதிமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பா..? தீபாவளி போனஸ்..! இபிஎஸ் கண்டனம்!

ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பா..? தீபாவளி போனஸ்..! இபிஎஸ் கண்டனம்!

கொடி அகற்றம்

இதனை தொடர்ந்து இரு நீதிபதி அமர்வில், ஓபிஎஸ் மனு தாக்கல் செய்த நிலையில், அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பின் படி ஓபிஎஸ் தனது வாகனத்தில் இருந்து அதிமுகவின் கட்சி கொடியை நீக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.