நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு - இரவே விசாரணை..!
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
பொதுக்குழுவுக்கு தடையில்லை
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது.
பின்னர் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பொதுக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டார்.
மேல்முறையீடு
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் சுந்தர் மோகன்,துரை சாமி அமர்வில் இன்று இரவே விசாரணை வரவுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தனி நீதிபதி தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil