பாஜக இல்லையென்றால் அதிமுக ஜெயிக்கவே முடியாது; நான் ஏன் தூது..? ஓபிஎஸ் திட்டவட்டம்!
பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் வெற்றி பெறமுடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
ஓ.பன்னீர் செல்வமும், தினகரனும் அதிமுகவில் இணைவதற்காக திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாகவும், குறிப்பாக ஓபிஎஸ் பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "நான் எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாக பரவும் செய்திகள் வடிகட்டின பொய். அவருக்கு தூது அனுப்ப எனக்கு அவசியம் இல்லை.
பாஜக கூட்டணி
இன்றைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடியும். அதுவும், ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம்.
இல்லையென்றால், யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. நானும், டிடிவி தினகரனும் ஓரணியில் தான் இருக்கிறோம். எங்களுடன் இணைவது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.