பாஜகவின் காலடியில் விழுந்தது ஓ.பி.எஸ்-ஆ? ஈ.பி.எஸ்-ஆ?

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
4 நாட்கள் முன்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியாரசு ஐபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

ஒற்றை தலைமை விவகாரம்

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசிய அவர்,அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை எடபாடி பழனிசாமி முன்னெடுத்திருக்கிறார்.

அவரது அணியினர் முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் ஆரோக்கியமான அரசியல் கட்சிக்கு அவசியமானது தான்.ஆனால் அதன் முறை பிழையானது நேற்மையற்றது.

ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் முதலமை்சசராக நியமிக்கப்பட்டவர். அணிகளை சேர்த்துக்கொண்டு சாதாரண கடைநிலை அரசியலை செய்யாத ஒரு தரமான அரசியல்வாதி.

திட்டமிட்ட சதி 

எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு ஒற்றை தலைமை விவகாரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னை ஒற்றை தலைமைக்கான சூழலை ஏற்படுத்தி கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி 5 ஆண்டுகள் திட்டமிட்டு ஒற்றை தலைமை நோக்கத்திற்காகவே இயங்குகிறார். மத்திய பாஜக அரசு அதிமுக மீது தோழமையோடு இருந்ததால் எடப்பாடி செய்த முறைகேடுகளை ஊக்குவித்தது கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார்.

இது குறித்து முழு பேட்டியே காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..    


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.