தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Government of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir Jun 13, 2022 02:38 AM GMT
Report

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

இதையடுத்து கொரோனா குறைய தொடங்கியதால் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு | Opening Of Schools Throughout Tamil Nadu

அத்துடன் 10, 11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் ஒருமாத கால கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள் உள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளிக்கு துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!