1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

school cm discuss 1 to 8 when starts
By Anupriyamkumaresan Sep 20, 2021 10:39 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பல்வேறு கட்டமாக ஆலோசனை மேற்கொண்டனர்.

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது? | School 1 To 8 When Starts Cm Dicuss Today

அந்த ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்நிலையில் முதல்வர் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு இன்று ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார்.

அதன்படி சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் தற்போது 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது சரியாக இருக்குமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது? | School 1 To 8 When Starts Cm Dicuss Today

இந்நிலையில் பெற்றோர்களின் விருப்பத்தின் படியே மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும் முதலில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரத்திலிருந்து அல்லது அக்டோபர் முதல் வாரத்திலிருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.