இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு - மக்கள் அதிர்ச்சி

india corona newvirus Discovery omicron இந்தியா virus-symptoms tripana-xe புதியவகைகொரோனா கண்டுபிடிப்பு
By Nandhini Apr 06, 2022 12:40 PM GMT
Report

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வரும் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வந்த டெல்டா வகையால் இந்தியாவில் 2வது அலை உருவாகி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் டெல்டா பிளஸ் வகை வந்தபோதிலும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வகையானது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது.

முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை என்பதால் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது. கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்து விடாது. உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்ததால், கட்டுப்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் தளர்வுகளை அறிவித்தது.

மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திரும்பவும் இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒமைக்ரானின் புதிய வகையான துணை திரிபான எக்ஸ்.இ. வகைத் தொற்று மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு - மக்கள் அதிர்ச்சி | India Corona Omicron Virus Symptoms Tripana Xe