13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13 தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் முன்பாகவே பள்ளி வகுப்பறைகள்,பள்ளி வளாகங்கள் மற்றும் அங்கிருக்க கூடிய மைதானங்கள் உள்ளிட்ட அனைத்தையும் துாய்மையாக சுத்தப்படுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க தொட்டிகளை துாய்மை பணியாளர்களை கொண்டு துாய்மைப்படுத்த வேண்டும்.
மின் இணைப்புகளில் மின் கசிவு ஏதேனும் உள்ளதா? அப்படி இருந்தால் உடனடியாக அந்த கோளாறுகளை சரிசெய்ய வேண்டும்.
பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஆகியவைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு மாணவர்கள் வரும் முதல் நாளே பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.