மதுரையில் தனியார் ஸ்கேன் சென்டரில் பயங்கர தீ விபத்து
மதுரையில் ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதால் பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள டாக்டர் தங்க ராஜ் சாலையில், ராஜா முத்தைய்யா மன்றம் அருகே ஆர்த்தி ஸ்கேன் சென்டர் என்ற தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது.
அங்கு முதல் தளத்தில் பொறுத்தப்பட்டிருந்த AC பழுதடைந்ததால் அதனை சர்வீஸ் செய்ய முடிவெடுத்து AC மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது AC-யில் இருந்து எதிர்பாராத விதமாக மின் கசிவு எற்ப்பட்டதால் தீ பிடித்தது.
சற்று நேரத்திலேயே தீ மளமளவென பரவ தொடங்கியதால் கரும்புகை சூழ்ந்துக்கொண்டது.
இதை பார்த்து உடனே சுதாரித்துக் கொண்ட டாக்டர் உள்பட அங்கு வேலை செய்யும் 48 டெக்னிஷியன்களும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.
சம்பவம் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயனைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்து புகையை கட்டுப்படுத்தினர்.
இதனால் அப்பகுதி பரபரப்பானது.
மேலும் 20-ற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளே இருந்த நிலையில் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.