இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம் - பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்!
புத்தகத்தை பார்த்து எழுதும் முறையை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மாணவர்களுக்கான தேர்வு முறையை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
அதன்படி, சிபிஎஸ்இ அமைத்த குழு கொடுத்த பரிந்துரைகளில் ஒரு பரிந்துரையாக இருந்த புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை விரைவில் சோதனை முறையில் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
open book
அப்படி நடக்கும் பட்சத்தில் மாணவர்கள், தேர்வறைக்கு புத்தகம் அல்லது அவர்களது குறிப்பேடுகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முதற்கட்டமாக, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஓபன் புக் முறையில் தேர்வு நடத்தப்படும்.
அதேபோல 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களுக்கு புத்தகங்களை பார்த்து எழுதும் தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், மாணவர்களின் நினைவாற்றலை மதிப்பிடாமல், பாடத்தின் மீதான புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.