அடுத்த ரெய்டு... திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
திமுக கட்சி நிர்வாகியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகி
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தி.மு.க தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். இவர் வெளியூரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார், பின்னர் பழனியில் இவருக்கு சொந்தமான ஒரு சிபிஎஸ்இ பள்ளி ஒன்று உள்ளது.
மேலும், செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான இவர் அவரால் தான் வளர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பிறகு தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
சோதனை
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த சென்றனர். அவரது வீட்டில் யாரும் இல்லாததால், முத்துபட்டியிலுள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்து பங்களாவில் சோதனை நடத்த சென்றனர்.
மறுபடியும் அவரது வீட்டிற்கு வந்தபொழுது வீரா சாமிநாதன் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது நேற்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கிய சோதனை, சுமார் 18 மணி நேரம் தொடர்ந்திருக்கிறது. மேலும், அவரது தோட்டத்து வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசருடன் இரவு முழுவதும் சோதனை நடந்தது.