குஷ்பூவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரலாகும் வீடியோ
நடிகை குஷ்பூவை திமுக பேச்சாளர் சைதை சாதிக் ஆபாசமாக பேசிய வீடியோ காட்சிகள இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
திமுக நிர்வாகியாக இருந்து வருபவர் சைதை சாதிக் இவர் கடந்த சில நாட்களாக மேடைகளில் பாஜக நிர்வாகிகள் பலரையும் விமர்சித்து வருகிறார். இவரின் பேச்சுக்கு பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகரில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுக்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்க கூட்டம் நடைபெற்றது.
இக்ககூட்டத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போது திமுக பேச்சாளரான சைதை சாதிக் என்பவர் பாஜக குறித்தும்,
பாஜக மகளிர் நிர்வாகிகள் பற்றியும் தகாத வார்ததைகளில் விமர்சித்துள்ளார். அவர் பேசியதை கண்டு அமைச்சர் சிரித்ததால் இந்த வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே பெண்கள் கேட்க வேண்டிய மூன்றாந்தர பேச்சுக்கள். இதற்கு முதல்வர் மற்றும் அவரது திமுக கட்சியினர் அமைதி காப்பார்கள். இத்தகைய பொரிக்கிகள் தளர்வாக விடப்படுகின்றன. .@tnpoliceoffl .@CMOTamilnadu .@mkstalin pic.twitter.com/RVjCymgDXv
— Gayathri Raguramm ??? (@BJP_Gayathri_R) October 27, 2022