இந்தியாவில் இந்த மாநிலங்களில் மட்டும் தான் புத்தாண்டுக்கு லீவு! முழு விவரம் இதோ!
இந்தியாவில் எங்கெல்லாம் புத்தாண்டுக்கு லீவு என்று பார்க்கலாம்.
புத்தாண்டு
எதிர்பார்ப்பு - ஆவல் - ஆசை - கனவு என பலவற்றையும் சுமந்து கொண்டு ஆங்கில புத்தாண்டு 2025 இன்னும் ஒரு நாளில் பிறக்க இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஆண்டை துவங்கும் அனைவரின் நாளெனங்களும் கைகூட இந்தாண்டில் நிகழும் என்ற நம்பிக்கையுடன் நுழைவோம்.
இந்தியாவில் உள்ள பெரும்பலான மக்கள் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடுவது வழக்கமாக வைத்து வந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
- தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள புதுச்சேரிக்கு புத்தாண்டு பொது விடுமுறை விடப்படுகிறது.
- மணிப்பூர்
- மிசோரம்
- மேகாலாயா
- நாகாலாந்து
- அருணாச்சல பிரதேசம்
- மேற்கு வங்காளம்
- சிக்கிம்
முழு விவரம்
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மாலை முதல் புதன்கிழமை வரை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரையில் மக்கள் கூடி, புத்தாண்டு பிறந்ததும் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். பாதுகாப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு மெரினா கடலில் பொதுமக்கள் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
மெரினாவில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கையாக போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர்.