அதிரடியாக குறைந்த வெங்காய விலை.. 1 கிலோ எவ்வளவு?
கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை அதிரடியாக குறைந்துள்ளது.
வெங்காய விலை
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தினசரி உணவில் பயன்படுத்தும் காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது.
ஒரு கிலோ தக்காளி ரூ.26, உருளை கிழங்கு ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.110, வெண்டைக்காய் ரூ.25, முள்ளங்கி ரூ.40, முட்டை கோஸ் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.35, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 1,200 டன் வெங்காயம் வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வரத்து குறைந்ததால் விலை உச்சத்தில் இருந்தது. நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் இன்று விலை குறைந்து ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வந்ததால் தற்பொழுது சிறிது குறைந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.