தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : 200-ஐ நெருங்கும் பாதிப்பு

COVID-19
By Irumporai Jun 08, 2022 04:54 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில்  அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : 200-ஐ நெருங்கும்  பாதிப்பு | Corona Impact Approaching 200 In Tamil Nadu

அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

101 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 95பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.