சூழ்ச்சியால் சொத்துகளை சுருட்டி கைவிட்ட பிள்ளைகள்.. ஆட்சியரிடம் கண்ணீருடன் நின்ற முதியவர்!

Mayiladuthurai
By Vinothini Oct 31, 2023 11:17 AM GMT
Report

 முதியவர் ஒருவர் தனது மகன்கள் ஏமாற்றியதாக கண்ணீருடன் நின்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைவிட்ட பிள்ளைகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்தவர் முதியவர் முத்துவீரன். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்று அதில் கிடைத்த 48 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணத்தில் தனது பிள்ளைகளுக்கு தலா 6 லட்சம் எனப் பிரித்துக் கொடுத்துள்ளார்.

father-came-to-file-case-against-his-sons

பிறகு மீதம் இருந்த பணத்தை அவர்களுக்கு தவணை முறையில் கொடுத்து வந்துள்ளார். இவரது மகன் சண்முகசுந்தரம் மட்டும் தந்தைக்கு மாதம் ரூ. 2000 பணம் கொடுத்து வந்தார், பின்னர் மருத்துவ சிகிச்சைக்கும் உதவி செய்து வந்தார், ஆனால் 6 மாதமாக அவரும் கண்டுகொள்ளவில்லை.

திருப்பி அடிச்சா முழுசா காணாம போயிடுவீங்க.. ரொம்ப நாள் நிலைக்காது - அண்ணாமலை எச்சரிக்கை!

திருப்பி அடிச்சா முழுசா காணாம போயிடுவீங்க.. ரொம்ப நாள் நிலைக்காது - அண்ணாமலை எச்சரிக்கை!

கண்ணீருடன் முதியவர்

இந்நிலையில், மனம் நொந்துபோன முதியவர் தன்னையும், தன் மனைவி ரமணியையும், கண்டுகொள்ளாத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கச் சீர்காழி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து விசாரித்த கோட்டாட்சியர் அர்ச்சனா, மகன் சண்முகசுந்தரம் அவரின் பெற்றோர்களின் ஆயுட்காலம் வரை மாதம் ரூபாய் 5000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார்.

father-came-to-file-case-against-his-sons

தவறினால் மனுதாரர் 1 மாதத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த முத்துவீரன் தன்னையும் தனது மனைவியையும் வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது மகன்கள் மற்றும் மருமகன் ஏமாற்றிவிட்டனர்,

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பிள்ளைகளை தவமிருந்து பெற்று, ஆசைப்பட்டதை அனைத்தும் கொடுத்து வளர்க்கும் பெற்றோரை நிர்கதியாக கண்டுகொள்ளாமல் விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.