நடிகை மீனாவை காதலித்தாரா திருமாவளவன்? உருக்கமான பதில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் பிறந்த நாள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
பிறந்த நாள் விழா
இந்த நிலையில் அவரின் 60வது பிறந்த நாளையொட்டி மணி விழா சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி, திருமாவளவன் தாயார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த உணர்வுபூர்வமான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அப்போது பேசிய அவர், இந்த 60 வயதில் நான் மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றுள்ளேன்.
நான் எதையும் இழக்கவில்லை மக்களின் அன்பை, ஆதரவை இழக்காமல் இருந்தால் போதும் என்றார்.
திருமா குடும்பம்
பின்னர் தனது குடும்பத்தை பற்றி பேசிய அவர், தனது அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் என்றும் அவர்கள் இருவரும் உடன்பிறந்த அக்கா , தங்கை என குறிப்பிட்டார்.
வீட்டில் அடிக்கடி பெரிய அளவில் இரண்டு மனைவிகள் அதாவது பெரியம்மா, மற்றும் சின்னமாவிற்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கும் நான் அழுது கொண்டிருப்பேன்.
எங்க வீட்டில் அப்பா பெரியம்மா அதாவது என் அம்மாவை தான் அதிகம் அடிப்பார். பெரியம்மா என்ற என் அம்மாவிற்கு அக்கா மற்றும் நான், சின்னமாவிற்கு 3 மகன்கள் அதில் ஒருவர் தம்பி விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
என் அம்மாவை விட என் சின்னம்மா தான் என்னை குளிப்பாட்டிவிடுவார். நான் பள்ளிக்கு செல்லும் போது இரண்டு ஜடைகளையும் பின்னி தான் அனுப்புவார்கள். அப்போ மொட்டை அடிக்க பணம் இல்லாததால் வறுமையில் என்னை அப்படியே விட்டுவிட்டார்கள்.
அப்போ ஊருக்கு முடிவெட்டுவோர்கள் மாதம் ஒரு முறை வருவார்கள். நான் அவரிடம் சென்று முடி வெட்டிவிடுங்கள் என்று சொன்னேன் அப்போ அவர் என் அப்பாவுக்கு தகவல் கொடுத்துவிட்டார். இதையடுத்து அங்க வந்த என் அப்பா என்னை அடித்தார்.
பின்னர் முடி வெட்டுபவர் சாமிக்கு முடி எடுத்து வைத்துவிட்டு முடியை எடுக்கலாம் என்று கூறியதை அடுத்து என் அப்பா ஒத்துக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், என் அப்பா எல்லாருக்கும் முடி வெட்டிவிடுவார். நான் எதையும் கேட்க மாட்டேன் ரொம்ப அமைதியா இருப்பேன் என்றார்.
இதையடுத்து நெறியாளர் உங்களுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தார்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், என் வாழ்க்கையில் அது நிகழவில்லை என்றார்.
மேலும் பேசிய திருமாவளவன், தன்னை ஒரு பெரியவர் பின் தொடர்ந்தார். அந்த பெரியவர் என்னிடம் இரண்டு விசயங்களை சொன்னார். அதில் ஒன்று உன் கட்சியின் பெயரை மாற்று, மற்றொன்று உனக்கு திருமணம் என பேச்சு கொடுத்தார் நான் சிரித்துக் கொண்டேன்.
மீனாவை காதலித்த திருமா?
பின்னர் அவர் தன் தாய் திருமணம் குறித்து தற்போது வரை அழுது வருகிறார். நடிகை ஒருவரை காதலித்ததாக சொல்கிறார்களே அது உண்மையா என்ற கேள்விக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. சந்தித்தது கூட இல்லை.
அந்த நடிகையை பொற்காலம் படத்தில் தான் பார்த்து இருக்கிறேன் என்றார். அவர் நடித்த தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ரொம்ப அருமையான பாடல் என்று பேசினார்.
என் அப்பா இறக்கும் போது கூட தம்பி கல்யாணம் பண்ணிக்கப்பா என்று கடைசியாக பேசினார். பின்னர் நெறியாளர் துணைக்கு ஒரு பெண் வைத்து கொள்ள திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் அளித்த அவர், பார்ப்போம், சூழல் எப்படி போகுதுன்னு பார்ப்போம்.
நான் இந்துக்களின் விரோதியா? திருமாவளவனின் ரமழான் நோன்பு