கண்ணீர் வரவைக்கும் வெங்காய விலை - அப்போ தக்காளி விலை?
வெங்காயத்தின் விலை கிலோ ரூ.65 ஆக உயர்ந்துள்ளது.
வெங்காய விலை
வெங்காய உற்பத்தியில் 30.41 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 15.51 சதவீதம், மத்திய பிரதேசம் 13.66 சதவீதம், தமிழகம் 1.65 சதவீத விளைச்சலுடன் 13-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் கடந்த 2 மாதங்களாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கு மேல் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. கடந்த ஒரு வாரமாக கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்து வருகிறது. எனவே, மொத்த விற்பனை சந்தையில் கிலோ ரூ.65-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.70 முதல் ரூ.90 வரையும் விற்கப்பட்டு வருகிறது.
வரத்து குறைவு
திருவல்லிக்கேணி ஜாம்பஜார், அரும்பாக்கம். பெரம்பூர், மயிலாப்பூர் ஆகிய சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும், தக்காளி கிலோ ரூ.23, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் தலா ரூ.30, கத்தரிக்காய் ரூ.10, பீன்ஸ், பாகற்காய், நூக்கல் தலா ரூ.20, அவரைக்காய் 25,
முள்ளங்கி, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய் தலா ரூ.15, சாம்பார் வெங்காயம் ரூ.35 என விற்பனையாகிறது. இதுகுறித்து காய்கறி வியாபாரி கூறுகையில், தற்போது பெரிய வெங்காயத்தின் 2-வது பருவ பயிர் முடிவுக்கு வரும் நேரம்.
இது மட்டுமல்லாது பெல்லாரி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.