பிரேசிலில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பசு ஒன்று இதுவரை இல்லாத விலைக்கு ஏலம் போயுள்ளது.
40 கோடிக்கு ஏலம்
பிரேசிலில் நடந்த ஏலம் ஒன்றில் Viatina-19 FIV மாரா இமோவிஸ் என்று அழைக்கப்படும் பசு மாடு ரூ.40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்வீகமாக கொண்டுள்ள இந்த வகை மாடுகள் அறிவியல் ரீதியாக Bos Indicus என்று அழைக்கப்படுகிறது.
இந்த வகை மாடுகளுக்கு பிரேசிலில் அதிக தேவை உள்ளது. இது இந்தியாவின் ஓங்கோல் கால்நடைகளின் வம்சாவளியாகும். இந்த வகை மாடுகள் அதன் வலிமைக்கு பெயர் பெற்றவை மற்றும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை.
என்ன சிறப்பு?
மிகவும் வெப்பமான சூழ்நிலையிலும் வாழக்கூடியவை. இந்த வகை மாடுகளுக்கு எந்த வித தொற்றும் ஏற்படாது. இதனால் எந்த நாட்டிலும் இவற்றால் வாழ முடியும். பிரேசிலின் காலநிலைக்கு இந்த வகை மாடுகள் பொருந்திப்போவதால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்த இன மாடுகள் முதல் முறையாக 1868-ல் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் 1960-களில் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாறு அவை அங்கு பிரபலமடையத் தொடங்கிவிட்டன. இந்த மாடு காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளும் தன்மை, உடல் வலிமை ஆகிய பண்புகளால் அதன் வம்சத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் ரூ.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.