Friday, Jul 18, 2025

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் - திருமணம் செய்துகொண்ட ராணுவ வீரர்!

United States of America World
By Jiyath a year ago
Report

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளில் ஒருவரான அப்பி என்பவர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

அப்பி -  ஹென்சல்

உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள். அமெரிக்காவை சேர்ந்த இவர்கள் 1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் பங்கேற்ற பின் பிரபலமாகினர்.

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் - திருமணம் செய்துகொண்ட ராணுவ வீரர்! | Conjoined Twin Abby Hensel Got Married

இந்த இரட்டையர்களுக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக உள்ளது. ஆனால், கை மற்றும் கால்கள் இரண்டு தான் உள்ளது. மேலும், இருவரும் தனித்தனியாக எழுதுதல், படித்தலில் ஈடுபடுகிறார்கள். 

1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!

1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!

திருமணம் 

அதேபோல் தனித்தனியாக கார் ஓட்டி அவர்களுக்கென தனியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர். இந்த இரட்டை சகோதரிகளில் ஒருவரான அப்பி 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் - திருமணம் செய்துகொண்ட ராணுவ வீரர்! | Conjoined Twin Abby Hensel Got Married

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு திருமண செய்தியை முதல் முறையாக அறிவித்துள்ளார். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் ஜோஷ் பவுலிங் திருமண நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.